திண்டுக்கல் சவுந்திரராஜ பெருமாள் தேய்பிறை அஷ்டமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2016 10:12
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆன்மிக சொற்பொழிவு: முரளிதர ஸ்வாமிகளின் சீடர் கிருஷ்ண ஷைத்தன்ய தாஸின் சொற்பொழிவு நடந்தது. அதில் பேசியதாவது: மார்கழி மாதம் விசேஷமானது. திருப்பாவை நோன்பு இருந்து ரங்கநாதரை ஆண்டாள் அடைந்தார். அதே போல் தினமும் இறைவனின் திருநாமத்தை பாடி வந்தால் வாழ்வில் எல்லா நன்மையும் பெறலாம். உணவுக்கும், எண்ணத்திற்கும் தொடர்பு உண்டு. கோயிலில் சுவாமிக்கு படைக்கும் உணவு, பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும். அதே போல் தினமும் சாப்பிடுவதற்கு முன் இறைவன் திருநாமத்தை சொல்லி சாப்பிட்டால், அது இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதமாக மாறும், என்றார்.