பதிவு செய்த நாள்
22
டிச
2016
10:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாவான கார்த்திகை தீப திருவிழா, டிச., 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. டிச., 12ல், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், கொட்டும் மழையில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். மழையாலும், மேக மூட்டதாலும் அன்று மஹா தீபம் தெரியாமல் பக்தர்கள் தவித்தனர். மறுநாள் காலை, 7:30 மணிக்கு மஹா தீபம் தெளிவாக தெரிந்தது. அப்போது பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 11 நாட்கள் மஹா தீபம் எரிந்தது. இந்நிலையில், தீப திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.