பதிவு செய்த நாள்
22
டிச
2016
11:12
நாமக்கல்: ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, வடை மாலை தயாரிக்கும் பணி முழு வீச்சில் துவங்கியுள்ளது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், மார்கழி அமாவாசையில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா, வரும், 28ல் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, நாமக்கல் மற்றும் கரூர் பக்தர்கள் சார்பில், 54 ஆயிரம் வடை மாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. இதற்காக, 1,500 கிலோ உளுந்து மாவு, 25 கிலோ மிளகு, 25 கிலோ சீரகம், 60 கிலோ உப்பு, 600 லிட்டர் அக்மார்க் எண்ணெய் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கு, 4.57 லட்ச ரூபாய் ஆகிறது. 54 ஆயிரம் வடை தயாரிக்கும் பணியில், 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு, ஒரு லட்சத்து எட்டு வடை சாற்றப்பட்டது. இதற்கு, 10 லட்ச ரூபாய் செலவிடப்பட்டது.ஆஞ்சநேயர் ஜெயந்தியன்று, சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்த பின், வடை மாலை சாற்றி, சிறப்பு வழிபாடு செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வடை வழங்கப்படும்.