சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக வள்ளி, தெய்வானை சமேத மூலவர், சதுர்முக முருகனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.