பெருமாள் கோயிலுக்குச் சென்றால் முதலில் தாயாரை வணங்கியபிறகே பெருமாளை வணங்குவது முறையாகும். இதற்கான காரணம் என்ன தெரியுமா? வீட்டில் எந்த விஷயமாக இருந்தாலும், அம்மாவிடம் தொடங்கிய பிறகே அப்பாவிடம் பிள்ளைகள் சொல்வர். அப்பாவின் கண்டிப்பு அம்மாவிடம் இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் அம்மா என்றால் ஒரே அன்பு மயம் தான். இதைப் போலவே, பிள்ளைகளாகிய நம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும்படி திருமாலிடம் திருமகள் பரிந்துரை செய்கிறாள். இதனை புருஷகாரம் என்பர். அதனால், பெருமாள் கோயில்களில் முதலில் தாயார் சந்நிதியைத் தரிசித்த பின்னரே பெருமாள் சந்நிதிக்குச் செல்வர்.