கணவரிடம் மற்ற பெண்களைப் பற்றி மனைவியர் வர்ணிக்க வேண்டாம் என்கிறது இஸ்லாம். கணவரிடம் பெண்கள், “என் தோழி எவ்வளவு அழகாக இருப்பாள் தெரியுமா? அவளுக்கு அவளது கணவர் நேற்று வாங்கிக் கொடுத்த புடவையில் அவள் ஜொலித்தாள் தெரியுமா? அவளைப் போல் யாராலும் மட்டன் குழம்பு ருசியாக வைக்க முடியாது, ஏன்... நான் கூட அந்தளவுக்கு சமைக்கத் தெரிந்தவளில்லை என்றெல்லாம் பெண்கள் பிற பெண்களைப் பற்றி கணவரிடம் சொல்வதைத் தவிர்க்க வேண்டும். இதன் காரணமாக, அந்தப் பெண்ணின் மீது கணவனின் சிந்தனை செல்லும். சில சமயங்களில் அவளைப் போல் நமக்கு மனைவி அமையவில்லையே என்ற எண்ணம் ஏற்படும். இது தேவையற்ற வழிகேடான செயல்களுக்கு கூட காரணமாகி விடும். ஆண்கள் வேலைக்கு போய் வந்தவுடன் நிம்மதியை நாடுகிறார்கள். அவர்கள் வந்ததும், அவர்களுக்கு இதமானதையே மனைவி பேச வேண்டும். அன்று வீட்டில் நடந்த நல்ல விஷயங்களைச் சொல்ல வேண்டும். நாளைய தேவைகளைப் பற்றி பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். தொழுகை நேரம் வந்துவிட்டால் அதை நினைவூட்ட வேண்டும். இதமாக நடந்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் சுவையான உணவை அளிக்க வேண்டும். “ஒரு பெண் இன்னொரு பெண்ணை பற்றி தம் கணவரிடம், அவளை அவர் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம் என்று குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதைக் கடைபிடித்தால், குடும்பத்தில் நிம்மதி நிச்சயம்.