Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அனுமனைப் போல் வாழ்வோம்! அவசரப்பட்டு நேர்ந்துட்டேன்.. என்ன ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2016
05:12

*கடவுளின் திருவடியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அனைத்து பிரச்னைகளையும் அவரிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர் நடத்தும் நாடகத்தில் நாமெல்லாம் வெறும் நடிகர்கள்.
*கடிகாரத்தின் முட்கள் டிக் டிக் என்று தொடர்ந்து ஒலிப்பது போல எப்போதும்  கடவுளின் திருநாமத்தை இடைவிடாமல் ஜெபித்து வாருங்கள். எல்லா நன்மையும் கிடைக்கப் பெறுவீர்கள்.
*ஜபிப்பதற்கு காலை, மாலை இரண்டுமே ஏற்ற நேரங்கள். நேரம் எதுவாக இருந்தாலும் மனம் ஒன்றி ஜபிப்பது அவசியம். ஒருநாள் கூட ஜபம் செய்யாமல் இருப்பது கூடாது.
*தூய்மையான மனம் படைத்தவர்கள் உலகிலுள்ள அனைத்தையும் தூய்மையாகவே பார்க்கிறார்கள். அவர்கள் சொல்லாலும், செயலாலும் மற்றவர்களுக்கு நன்மையே செய்வார்கள்.
*வாழ்வில் கஷ்டங்கள் வந்தாலும் அவை நீடித்துக் கொண்டிருப்பதில்லை. அவை பாலத்தின் அடியில் ஓடும் நீரைப் போல ஓடி மறைந்து விடும்.
*யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம். உங்களின் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
*சாதாரண மனிதன் இந்த உலகை விட்டுச் செல்லும் போது அழுகிறான். ஆனால், மகான்கள் சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.
*உண்மையான துறவிக்கு மட்டுமே பணத்தின் மீதுள்ள ஆசையை வெல்லும் சக்தி இருக்கிறது. மற்றவர்களை எல்லாம் பணம் ஆட்டிப் படைக்கிறது.
*எந்த இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள். சுற்றியுள்ள மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு துணை நில்லுங்கள்.
*உலகில் கடவுள் மட்டுமே உண்மை. மற்ற அனைத்தும் பொய். இந்த உண்மையை மனிதன் உணர்ந்து கொண்டால், அவனுக்கு மகிழ்ச்சி தவிர வேறு ஏதுமில்லை.
*எப்போதும் சுறுசுறுப்புடன் பணியில் ஈடுபடுங்கள். முயற்சி இல்லாமல் உலகில் எதுவும் நடப்பதில்லை.
*துன்பம் என்பதும் கடவுளின் பிரசாதம். அதுவும் உங்களை நல்வழிப்படுத்தவே கடவுளால் அளிக்கப்பட்டிருக்கிறது.
*நட்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல. சமயத்தில் எச்சரித்து திருத்தும் கடமையும்  உண்மையான நட்புக்கு இருக்கிறது.
*கல்வியால் மனிதன் தானும் மேன்மைஅடையலாம். மற்றவர்களையும் மேன்மை அடையச் செய்யலாம்.
*மனதை அடக்கப் பழகுங்கள். பிறரது அந்தரங்கம்  பற்றி அறிந்து கொள்வதில்  ஆர்வம் காட்டாதீர்கள்.
*கடவுள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார்.  அறிவைக் கொண்டு அவரை அளக்க முற்படாதீர்கள்.
*மதம் பிடித்த யானையைப் போல மனம் செயல்படுகிறது. தியானத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியும்.

(மகான் சாரதாதேவியார்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar