பதிவு செய்த நாள்
27
டிச
2016
11:12
திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோடு ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், 57ம் ஆண்டு மண்டல பூஜை விழா, கடந்த நவ.,16ல் துவங்கியது. தொடர்ந்து, நவ கலச அபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம், ஆறாட்டு, ரதத்தில் எழுத்தருளி திருவீதி உலா, குத்து விளக்கு பூஜை, லட்சார்ச்சனை, புஷ்ப அபிஷேகம், அன்னதானம், பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்சிகள் தினமும் நடைபெற்று வந்தன. நேற்று, மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு, ஒன்பது கலசங்களில் சந்தனம் நிரப்பப்பட்டு, சிறப்பு பூஜைகளுடன், களாபாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் நடந்தது. பலவகை பூக்களால், மாலைகள் செய்யப்பட்டு, சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.