Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரும் 29ல் கொண்டத்து வீர ... பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில் மண்டல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் டிச.,29ல் பகல் பத்து உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2016
01:12

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிச.,29ல் பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பை முன்னிட்டு டிச.,29ல் பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி முடிந்தவுடன் பெருமாள் புறப்பாடாகி ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளுவார். மாலை 6 மணிக்கு ஆஸ்தானம் புறப்பாடு நடைபெறும். 10ம் நாளில் மோகினி அவதாரத்தில் பெருமாள் தென்னமர வீதி புறப்பாடு நடைபெறும். அன்று பகல் பத்து நிறைவடைந்த பின், ஜன.,8ல் வைகுண்ட ஏகாதசியைமுன்னிட்டு காலை 9 மணிக்கு பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி சயனத்திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து தாயார் சன்னதியில் அருள்பாலிக்கிறார். இரவு 8 மணிக்கு ராஜஅலங்காரத்தில் காட்சி அளிப்பார்.

இரவு 10 .30 மணி அளவில் பரமபத வாசல் திறந்த பின்னர் அதைக் கடந்து ஏகாதசி மண்டபம் சென்று பத்தி உலாத்துதல் நடைபெறும்.மங்களாசாசனம் முடிந்து தென்னமரத்து வீதி புறப்பாடு நடைபெற்று கருங்கல் மண்டபத்தில் எழுந்தருளுவார். தொடர்ந்து இரவுப்பத்து உற்சவம் துவங்கும். இரவுப் பத்தில் தினசரி மாலை 6 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பிரவேசிப்பார். தொடர்ந்து தென்ன மரவீதி புறப்பாடாகி தாயார் சன்னதியில் எழுந்தருளல் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar