பதிவு செய்த நாள்
28
டிச
2016
12:12
புதுச்சேரி: லாஸ்பேட்டை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு தொழில்நுட்ப மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பாக்கமுடையான்பட்டு கோவிலில் துப்புரவு பணி மேற்கொண்டனர். லாஸ்பேட்டை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு தொழில்நுட்ப மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் 7 நாள் நலப்பணிதிட்ட முகாமை, மாநில நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி குழந்தைவேலு துவக்கி வைத்தார். பள்ளி துணை முதல்வர் மாதவன், திட்ட ஒருங்கிணைப்பாளர் திருவளவன், பயிற்றுனர் ரவீந்திரகுமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமின் நான்காம் நாளான நேற்று, பாக்கமுடையான்பட்டு செல்வ விநாயகர் கோவிலில், மாணவர்கள் உழவார பணி மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழலில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் , தேசிய நல்லாசிரியர் ராமநாதன் பேசினார். பேராசிரியர் செந்தில், யோகா பயிற்சி அளித்தார். முகாம் ஏற்பாடுகளை, திட்ட அலுவலர் ரொசாரியோ விக்டர், ஆசிரியர் மணிகண்டன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.