பதிவு செய்த நாள்
28
டிச
2016
12:12
ஆர்.கே.பேட்டை : சானுார், மல்லாவரம் கிராமத்தில், மருவத்துாரம்மனுக்கு, நேற்று, செவ்வாடை தொண்டர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். நாளை மறுதினம் மருவத்துாருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, சானுார், மல்லா வரம் கிராமத்தில் மருவத்துாரம்மனக்காக, செவ்வாடை தொண் டர்கள் மண்டல விரதம் மேற்கொண்டுள்ளனர். கிருஷ்ணர் கோவிலில், மருவத்துாரம்மனுக்கு வழிபாடு நடத்தி வருகின்றனர். நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு கஞ்சி கலயம் படைக்கப்பட்டது. இதில், லட்சார்ச்சனை மற்றும் குங்குமர்ச்சனை நடந்தது. மண்டல விரதம் மேற்கொண்டுள்ள திரமான செவ்வாடை தொண்டர்கள் இதில், கலந்து கொண் டனர். மண்டல விரதத்தின் நிறைவாக நாளை மறுதினம், மேல்மருவத்துாருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். அன்றைய தினம் மண்டல உற்சவம் நிறைவு விழா நடைபெற உள்ளது.