பதிவு செய்த நாள்
30
டிச
2016
01:12
அவிநாசி :அவிநாசியில், அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி திருவீதியுலா காட்சி நடைபெற்றது.அவிநாசி, நல்லாற்றின் கரையில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான, ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, அனுமன் ஜெயந்தி விழா, நேற்று காலை, 6:00க்கு, மூல மந்திர ஹோமமும், தொடர்ந்து, பல்வேறு திரவியங்களால், அனுமனுக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. மாலை, 5:00க்கு, ஸ்ரீ ராம கூட்டு பஜனை, மாலை, 7:00க்கு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி திருவீதி <உலா நடந்தது. மதியம், அன்னதானம் நடந்தது.விழாவையொட்டி, "அவிநாசியில் சுந்தரகாண்ட அனுமன் என்ற தலைப்பில், திருச்சி கல்யாணராமனின், பக்தி சொற்பொழிவு நடந்தது. கோத்தகிரி அரையட்டி, அருணாச்சல மஹிமா, தத்வன சைதன்ய சுவாமி தலைமையில், திவ்ய நாம சங்கீத பஜனை நடந்தது. சுவாமி திருவீதியுலாவின் போது, வெள்ளியம்பாளையம், கோதமுத்து வாத்தியார் - அவிநாசியப்பா நினைவு, பண்பாட்டு கலை பயிற்சி பள்ளி மாணவ, மாணவியரின் சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடந்தது.