பதிவு செய்த நாள்
30
டிச
2016
01:12
அழகர்கோவில், அழகர்கோவில் மற்றும் அதன் துணை கோயில்களில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. சுந்தரராஜ பெருமாள் கோயிலில் 5,10,651 ரூபாய், தங்கம் 108 கிராம், வெள்ளி 122 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். சோலைமலை முருகன் கோயிலில் 3,25,929 ரூபாய், தங்கம் 4 கிராம், வெள்ளி 434 கிராமும், தல்லாகுளம் பெருமாள் கோயிலில் 3,78,161 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. நிர்வாக அதிகாரி செல்லதுரை, உதவி ஆணையர் இளையராஜா முன்னிலையில் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.