பதிவு செய்த நாள்
31
டிச
2016
01:12
சென்னை: புத்தாண்டை முன்னிட்டு, பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், பக்தர்கள் தரிசனத்திற்கு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை, பெசன்ட் நகரில், அஷ்ட லட்சுமி கோவில் உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணி முதல், சன்னிதிகள் திறக்கப்படுகின்றன. கட்டணச்சேவை, கட்டணமில்லா சேவை என, தரிசன ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி ஆகிய சன்னிதிகளில் அர்ச்சனைக்கான, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கட்டண சேவையில் செல்லும் பக்தர்களுக்கு, நாட்குறிப்பு, பிரசாதம் இலவசமாக வழங்கப்படுகிறது.