பரமக்குடி,: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ஆருத்ரா உற்சவம் நேற்று மாணிக்கவாசகர் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் காலையில் மாணிக்கவாசகர் ஆடி வீதியுலாவும், மாலையில் திருவெம்பாவை வாசித்தல், தீபாராதனை நடக்கும். ஜன. 10 ம் தேதி இரவு 7 மணிக்கு கோயில் மகா மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு பச்சை சாத்தி புறப்பாடு, ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா அபிஷேகமும், நடராஜ மூர்த்தி வீதியுலா நடக்கிறது.