பதிவு செய்த நாள்
07
ஜன
2017
12:01
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா, ஜன.(8ம் தேதி) நடைபெறுகிறது. தாயாருடன் எழுந்தருளும் வீரராகப்பெருமாள், சொர்க்கவாசல் வழியாக சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். பகவானை தரிசித்து விட்டு சொர்க்கவாசல் வழியாக வரும் பக்தர்களுக்கு, திருப்பூர் ஸ்ரீ வாரி டிரஸ்ட் சார்பில், லட்டுபிரசாதம் வழங்கப்படுகிறது.
அதற்காக, லட்டு தயாரிக்கும் பணி ஜன.6ல் நடைபெற்றது. பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில், 75 சமையல் பணியாளர்களும், 600க்கும் அதிகமான பக்தர்களும், லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு டன் கடலை மாவு, இரண்டு டன் சர்க்கரை, 160 கிலோ நெய், 1200 கிலோ ஆயில் மற்றும் முந்திரி, திராட்டை, ஏலக்காய் பயன்படுத்தி, லட்டு தயாரிக்கப்பட்டது. காலை, 8:00 மணிக்கு துவங்கி, மாலை 6:00 மணி வரை, இப்பணி நடந்தது.