நடுவீரப்பட்டு : பாலூர் அடுத்த சித்தரசூர் பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று (14ம் தேதி) நடக்கிறது. விழாவையொட்டி 13ம் தேதி காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, மாலை 6 மணிக்கு அங்குரார்பணம், ரக்ஷபந்தனம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. இன்று காலை 5 மணிக்கு இரண்டாம் கால பூஜைகளும், 6 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் திரவுபதியம்மன், நவசக்தி மாரியம்மன் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகமும், 10 மணிக்கு பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகமும் நடக்கிறது. இரவு சுவாமி வீதி உலா நடக்கிறது.