பதிவு செய்த நாள்
15
அக்
2011
11:10
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், அக்., 26 தீபாவளியன்று, அம்மனுக்கு வைரக்கிரீடம், தங்கக்கவசம், சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டை அணிவிக்கப்படுகிறது.அக்., 27 முதல், நவ., 2ம் தேதி வரை, கோலாட்ட உற்சவம் நடக்கிறது. இந்நாட்களில், கோவில் சார்பாகவோ, உபயதாரர் சார்பாகவோ, தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் நடத்தப்பட மாட்டாது. அக்., 31 மாலை, 6 மணிக்கு, வெள்ளி கோ ரதத்தில், நான்கு ஆவணி மூல வீதிகளில் அம்மன் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.கந்தசஷ்டி உற்சவத்தை முன்னிட்டு, நவ., 2 காலை, 7 மணிக்கு, கூடல்குமாரருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, விசேஷ அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை நடக்கும்.