பதிவு செய்த நாள்
15
அக்
2011
11:10
சபரிமலை: சபரிமலையில் வரும் மண்டல சீசன் முதல் ஒரு ஆண்டுகாலத்துக்கான மேல்சாந்தி தேர்வு வரும் 18ம் தேதி நடக்கிறது. வரும் மண்டல சீசன் முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான நடை திறக்கும் நாட்கள் விபரங்களை திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது.
சபரிமலை நடை வரும் 17ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று வேறு விசேஷபூஜைகள் நடைபெறாது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். 18ம் தேதி காலை நடை திறந்ததும் நெய்யபிஷேகம் தொடங்கும். காலை 7.30க்கு உஷபூஜை முடிவடைந்ததும் புதிய மேல்சாந்தி தேர்வுக்கான பணிகள் தொடங்கும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு "இண்டர்வியூ மூலம் தேர்வு செய்த ஏழு பேர் பெயர்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டு, ஐயப்பன் முன்னால் பூஜிக்கப்பட்டு அதில் இருந்து ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். இதே முறையில் மாளிகைப்புறம் கோயிலுக்கும் மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவார். இவர்கள் இருவரும் வரும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஐப்பசி 30ம் தேதி வரை பதவியில் இருப்பர். ஐப்பசி மாத பூஜைகள் முடிந்து 22ம் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக இம்மாதம் 25ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். 26ம் தேதி பூஜைகள் முடிவடைந்து இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளையொட்டி இந்த பூஜை நடைபெறுகிறது. பின்னர் மண்டல கால பூஜைக்காக நவ.,16ம் தேதி மாலை 5.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கும்.வரும் மண்டல காலம் முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான சபரிமலை நடை திறக்கும் நாட்கள் பற்றிய விபரங்களை திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது. பூஜை விபரம், நடை திறக்கும் நாள், நடை அடைக்கும் நாள் என வரிசையாக கொடுக்கபபட்டுள்ளது. மண்டல பூஜை 2011: நவம்பர் 16, டிசம்பர் 27. மண்டல பூஜை 27-ம் தேதி நடைபெறும்.
மகரவிளக்கு பூஜை: டிசம்பர் 30, ஜனவரி 20. மகரவிளக்கு 15-ம் தேதி
மாசி மாத பூஜை: பிப்., 13 முதல் பிப்.,18
பங்குனிமாத பூஜை: மார்ச் 13 முதல் மார்ச் 18.
பங்குனி உத்திர திருவிழா: மார்ச் 26 முதல் ஏப்ரல் 5 வரை. கொடியேற்று மார்ச் 27, பங்குனி உத்திரம் மற்றும் ஆராட்டு ஏப்ரல் 5.
சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ திருவிழா: ஏப்ரல் 9 முதல் 18 வரை. சித்திரை விஷூ பூஜை ஏப்ரல் 14.
வைகாசி மாத பூஜை: மே 14 முதல் 19 .
பிரதிஷ்டை தின விழா: மே 30 முதல் 31.
ஆனி மாத பூஜை: ஜூன் 14 முதல் 19
ஆடி மாத பூஜை: ஜூலை 15 முதல் 20
ஆவணி மாத பூஜை: ஆகஸ்ட் 16 முதல் 21
திருவோண பூஜை: ஆகஸ்ட் 27 முதல் 31
புரட்டாசி மாத பூஜை: செப்டம்பர் 16 முதல் 21
ஐப்பசி மாத பூஜை: அக்டோபர் 16 முதல் 21
சித்திரை ஆட்ட திருநாள் : நவம்பர் 11முதல் 12
2012 மண்டல பூஜை விழா: நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரை. மண்டலபூஜை டிசபர் 26.
2013 மகரவிளக்கு கால பூஜைக்காக 2012 டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப்படும். 2013-ம் ஆண்டுக்கான மகரவிளக்குபூஜை அந்த ஆண்டின் ஜனவரி 14-ம் தேதி நடைபெறும்.