சபரிமலை பக்தர்கள் வசதிக்காகபயணிகள் ஹெலிகாப்டர் வசதி: இன்று தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2017 12:01
சபரிமலை: சபரிமலை வரும் பக்தர்கள் வசதிக்காக நிலக்கல்லுக்கு பயணிகள் ஹெலிகாப்டர் வசதி இன்று தொடக்கி வைக்கப்படுகிறது. சபரிமலை வரும் பக்தர்கள் வசதிக்காக முக்கிய இடைதங்கும் இடமான நிலக்கல்லில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஹெலிபேடு அமைத்துள்ளது. இரட்டை இயந்திரம் கொண்ட ஹெலிகாப்டர் இறங்கும் வகையில் இந்த ஹெலிபேடு சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் தனியார் பயணிகள் ஹெலிகாப்டர் இன்று காலை 9.30 திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு 10 மணிக்கு நிலக்கல்லில் தரை இறங்கும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன், உறுப்பினர்கள் அஜய்தரயில், ராகவன் ஆகியோர் இதில் வருகின்றனர். நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு 22 கி.மீ. ரோடு வழியாக பயணம் செய்து வரவேண்டும். அடுத்த சீசன் முதல் திருவனந்தபுரத்தில் இருந்து நிலக்கல்லுக்கு பயணிகள் முன்பதிவுக்கு ஏற்ப ஹெலிகாப்டர் இயக்கப்படும்.