பதிவு செய்த நாள்
13
ஜன
2017
11:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பகவான் ரமணரின், 137 வது ஜெயந்தி விழா ஜன12 நடந்தது. இதில், இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்று, ரமணரின் கீர்த்தனைகளை பாடினார்.
திருவண்ணாமலையில் உள்ள பகவான் ரமணர் ஆஸ்ரமத்தில், அவரது, 137 வது ஜெயந்தி விழா ஜன12 முன்தினம் துவங்கியது. ஜன12 நடந்த ஜெயந்தி விழாவில், அதிகாலை, 4:00 மணிக்கு மங்கள இசை, 4:30 மணிக்கு விஷ்ணுசகஸ்ரநாமம், 5:30 மணிக்கு அக் ஷ்ரநமாலை, ருத்ரஜெபம், 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டது. இதில்,
இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்று, ரமணரின் கீர்த்தனைகளை பாடினார். மாலை, 3:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ரமணர் ஆஸ்ரம நிர்வாகி மணி, செந்தில் கனபாடிகள், மகேஷ் பட் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.