தூத்துக்குடி : வேம்பார் தூய ஆவியானவர் பங்கின் புனித அந்தோணியார் ஆலயத்தில் 46வது ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது. திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பிராங்ளின் பர்னான்டோ தலைமை வகித்து திருவிழாவை துவக்கி வைத்தார். திருவிழா காலங்களில் பங்குத் தந்தையர்கள் திரேஸ்புரம் சைமன்ராஜ், விளாத்திகுளம் ஜான்பர்னபாஸ், பெரியசாமிபுரம் திருத்தொண்டர் சுரேஷ், குறுக்குச்சாலை ஆண்ட்ரூ சாந்தகுமார், வெள்ளப்பட்டி பிரைட் மச்சாது, சிப்பிகுளம் ஆன்றோ செல்வன், கீழவைப்பார் பிரதீப், வேம்பார் தென்மயிலைநகர் செல்வம், தருவைக்குளம் இசித்தோர், பீற்றர் பாஸ்டியன் ஆகியோர் மறையுரை ஆற்றினர். மாலை ஆராதனை நிகழ்ச்சிக்கு பெருமணல் பங்குத்தந்தை பால்கதிரவன் கி÷ஷாக் தலைமை வகித்தார். ரத்தினபுரம் பங்குத்தந்தை சகாய லூட்ரின் மறையுரை ஆற்றினார். தொடர்ந்து இரவு சப்பரப்பவனி நடந்தது. மறுநாள் திருவிழா திருப்பலி குழந்தையேசு திருத்தல அதிபர் ஸ்டான் பர்னான்டோ தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. மாலை கொடியிறக்கமும், அதனைத் தொடர்ந்து இரவு விவிலிய நிறைவு விழா கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் விவிலிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.