கேரளாவில் வைகுண்ட ஏகாதசியை விருச்சிக ஏகாதசி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். குருவாயூரில் பதினெட்டு நாட்கள் வெகுவிமர்சையாக தீப ஸ்தம்பங்களில் விளக்குகள் ஏற்றி கோயிலை சொர்க்கலோகம்போல் மாற்றிக் கொண்டாடுவர். ஏகாதசி அன்று காலை 3.00 மணிமுதல் மறுநாள் துவாதசி வரை கோயில் திறந்தே இருக்கும். விருச்சிக ஏகாதசியன்று விடியற்காலை குருவாயூரப்பனை தரிசித்தால் சொர்க்கவாசல் மிதித்த பலன் கிடைக்கும்.