புதுக்கோட்டையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் திருமயம். இதன் ஆதிகாலப் பெயர் திருமெய்யம். இத்தலத்தில் பகவான், திருவரங்கம் ரங்கநாதரைவிட பெரிய திருவுருவாக பள்ளிகொண்டிருக்கிறார். சன்னிதி வாசலில் இருந்து பெருமாளின் முழு உருவையும் தரிசிக்க முடியாது. அங்கே அமைந்துள்ள சாளரங்கள் வழியே தரிசிக்கலாம். ஒரு சாளரம் வழியே பெருமாளின் திருமுகத்தையும், மறுசாளரம் வழியே திருவடியையும் தரிசனம் செய்யலாம். பொதுவாக வைணவ கோயில்களில் ஏகாதசி திதியைக் கணக்கில் கொண்டு சொர்க்கவாசல் திறப்பது வழக்கம். ஆனால் திருமயத்தில் மட்டும் ஏகாதசி திதியை ஒட்டி வரும் பரணி நட்சத்திரத்தன்றுதான் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஏகாதசி திதியன்று பரணி நட்சத்திரமும் சேர்ந்து வந்தால் அன்றைய தினம் பரமபத வாசல் திறக்கப்படுகிறது.