பதிவு செய்த நாள்
17
ஜன
2017
12:01
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள், நேற்று பார் வேட்டை சென்றார். மாமல்லபுரத்தில் வீற்றுள்ள ஸ்தலசயன பெருமாள், சுற்றுப்புற பகுதி பக்தர்களுக்கு அருளாசி வழங்கவும், அவருக்குரிய நிலங்களை பார்வையிடவும், முயல் வேட்டையாடவும், காணும் பொங்கலன்று, பார் வேட்டை செல்வார். நேற்று, இந்த உற்சவத்தையொட்டி, கோவிலிலிருந்து, அதிகாலை, 3:30 மணிக்கு, அலங்கார பல்லக்கில், ராஜ அலங்கார சுவாமி எழுந்தருளி புறப்பட்டார். பூஞ்சேரி, பெருமாளேரி, வடகடம்பாடி, நல்லான்பிள்ளைபெற்றாள், காரணை, குச்சிக்காடு ஆகிய கிராமங்கள் வழியே சென்ற அவரை, பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். பகலில், குழிப்பாந்தண்டலம், லட்சுமி நாராயண பெருமாள் கோவிலை அடைந்து, சிறப்பு அபிஷேக திருமஞ்சனம் நடந்தது. மாலையில், அலங்கார முயலை வேட்டையாடினார். இரவு வீதியுலா சென்று, இன்று அதிகாலை மாமல்லபுரம் கோவிலை அடைந்தார்.