Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் பார் ... விவசாயிகளுக்கு பாதபூஜை : மரியாதை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவில்களில் மலைச்சுற்று விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவில்களில் மலைச்சுற்று விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

17 ஜன
2017
12:01

திருத்தணி: திருத்தணி பகுதிகளில் உள்ள சிவன் கோவில்,களில் நடந்த மலைச்சுற்று விழாவில், கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை மலைப்பகுதியில் அமைந்து உள்ளது சிவசக்தி சித்தேஸ்வரர் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று, மலைச்சுற்று விழா வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது. நேற்று, மலைச்சுற்று விழாவையொட்டி, மூலவர் ஈஸ்வரனுக்கு, காலை, 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணி முதல், நள்ளிரவு, 2:00 மணி வரை, கோவிலில், பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த பஜனை குழுவினர், பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். இதில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து, மாலை, 7:00 மணி முதல், அதிகாலை, 3:00 மணி வரை கோவில் வளாகத்தை, 108 முறை சுற்றி வந்து மூலவரை தரிசித்தனர். அதே போல், திருத்தணி முருகன் துணை கோவிலான சப்த கன்னியம்மன் கோவிலில், காணும் பொங்கலை முன்னிட்டு, வெளியூர்களில் இருந்து, ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் மற்றும் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து மூலவர் அம்மனை வழிபட்டும், சிலர் பொங்கல் வைத்து அங்கேயே மதிய உணவுஉண்டு கொண்டாடினர். இதேபோல், அதன் அருகே உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கைலாசா பிரம்மா கோவில், அகூர் அகத்தீஸ்வரர் கோவில், லட்சுமாபுரத்தில் உள்ள சிவன், பெருமாள் கோவில், நாபளூர் அகத்தீஸ்வரர் கோவில் உட்பட, பல கோவில்களில், சுவாமி வீதியுலா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar