Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆறு தரிசனங்களில் மீமாம்ஸை! சிந்தையை மகிழ்விக்கும் சிதம்பர ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆயர் குலத்தின் அணிவிளக்கு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2017
02:01

குழந்தை கிருஷ்ணனின் குறும்பு அளவுக்கு மீறிப்போனது. அன்னை யசோதாவினால் தன் கடமைகளைச் செய்ய முடியவில்லை. அவனைக் கண்டித்து உரலில் கட்டிப் போட்டால்தான் சரியாகும் என்று முயற்சி செய்தாள். ஆனால் என்ன இது! எவ்வளவு நீளமான கயிற்றைக் கொண்டு கட்ட முயற்சித்தாலும் ஒவ்வொரு முறையும் இரண்டு அங்குலம் குறைந்து விடுகிறதே என்று யசோதை ஆச்சரியப்பட்டாள். கிருஷ்ணன் குறும்புப் பார்வையுடன் அவளைப் பார்த்துச் சிரித்தான். இந்தக் காட்சியை வர்ணிக்கும் சுகப்பிரம்மரிஷி யசோதையின் நிலையைக் கண்டு பரிதாபப்படுகிறார்.

பிரம்மாதி தேவர்களாலும் கட்டுப்படுத்த முடியாத அகண்ட சச்சிதானந்தத்தை இந்த யசோதை கட்டுப்படுத்த நினைக்கிறாளே! அன்புக்கல்லவா கட்டுப்படுபவன் அவன்! யசோதையின் முயற்சியோ தொடர்கின்றது. ஆனால் ஒரு கட்டத்தில் அவள் சோர்வடைந்தாள். இறுதியாக பகவான் அவள் அன்புக்குக் கட்டுப்பட்டான். யசோதையோ மிகுந்த சிரமத்திற்குப் பிறகு ஒரு வழியாக அவனைக் கட்டிப்போட்டுவிட்டேன் என்று திருப்தியடைந்தாள்.

கிருஷ்ணன் கேட்டான்: அம்மா என்னை ஏன் கட்டிப் போட்டாய்?

யசோதை கூறினாள்: அப்படிச் செய்தால்தான் வீட்டு வேலைகளை உன் தொந்தரவு இன்றி செய்து முடிக்க முடியும்.

கட்டுண்ட கிருஷ்ணனோ யசோதையை நோக்கி கைதட்டி கேலியாகச் சிரித்தான்.

ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டாள் யசோதை. கண்ணன் பதிலளிக்கவில்லை. மீண்டும் மீண்டும் நகைத்தான்.

அங்கே சுகப்பிரம்மமோ, அம்மா யசோதா, உன்னைப் பார்த்தால் எனக்கு பரிதாபமே வருகிறது. ஜென்மஜென்மமாக சம்சாரத்தில் கட்டுண்டு, துன்பத்தில் உழலுகின்ற ஜீவர்களையெல்லாம் விடுவிக்க வந்த கண்ணனை உன் உள்ளத்தில் அன்பினால் கட்டிக் குலாவி நீயும் விடுதலை பெறுவதை விட்டு அவனைக் கட்டிப்போட்டு விட்டாய். இப்போது உன்னையும் சம்சார பந்தத்தில் மறுபடியும் கட்டிக் கொள்கிறாயே? இவற்றையெல்லாம் சிந்திப்பதற்கு உனக்கு எங்கே நேரமிருக்கிறது? என்று நினைத்தார்.

யசோதை வீட்டுக்கடமைகளைச் செய்ய சென்றுவிட்டாள். கட்டுண்ட கிருஷ்ணனோ இரு மருத மரங்களுக்கிடையே உரலோடு தவழ்ந்து சென்றான். உரலடிபட்டு இரண்டு மரங்களும் சாய்ந்தன. அவை மருதமரங்களா? அல்ல. நாரதரிஷியினால் சபிக்கப்பட்ட நள-கூபரர்கள். குபேரனின் பிள்ளைகள். சாப விமோசனம் பெற்ற அவர்கள் கண்ணனைத் துதித்தப்பாடி தேவலோகம் சென்றார்கள்.

மரங்கள் விழுந்த பெருத்த சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு, யசோதை மட்டுமல்ல, கோபிகைகள் எல்லோரும் ஓடி வந்தனர்.

குழந்தை கிருஷ்ணனோ விழுந்த மரங்களுக்கிடையே இருந்து அவர்களைப் பார்த்துப் புன்னகை புரிந்தான்.

யசோதை கண்ணனை வாரியெடுத்து, என் குலக் கொழுந்தே என்று நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

இப்படி, தான் கட்டுண்ட நிலையிலும் ஜீவர்களுக்கு விடுதலை அருளும் அந்த இறைவனை நமது உள்ளத்தில் அன்பு எனும் கயிற்றால் கட்டி விடுதலை பெறுவோம் என்று பாடுகிறாள் ஆண்டாள்.

மாயனை மன்னு வடமதுரை
மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும்
அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த
தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்
தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால்
சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான்
நின்றனவும்
தீயினில் தூ(சு) ஆகும்! செப்(பு)
ஏலோர் எம்பாவாய்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar