Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிந்தையை மகிழ்விக்கும் சிதம்பர ... இப்படியும் ஒரு அப்பாவா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குரு பக்தியில் சிறந்த கூரத்தாழ்வார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2017
02:01

திருவரங்கத்தில் அரங்கனின் அடியாராகத் திகழ்ந்தவர், உத்தம நம்பி. அவர் தமது லட்சுமி காவியத்தில், ஸ்ரீமத் ராமானுஜரின் முக்கியச் சீடர்களுள் ஒருவராக கூரத்தாழ்வாரைப் பற்றி மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார். ராமானுஜரின் அத்யந்த சீடரும், குருவான ராமானுஜருக்கு எந்தத் தீங்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகத் தனது கண்களையே இழந்து குருவைக் காப்பாற்றியவர், கூரத்தாழ்வார். இவர் பெருமாள் கோயில் என்கிற காஞ்சிக்கு அருகில் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கூரம் என்னும் ஊரில் செல்வச் செழிப்பும் நற்பண்பும் கொண்டவரும், கூரமாநகரை அரசாட்சி செய்து வந்தவருமான நந்தா -பெருந்தேவி நாயகி தம்பதிக்குத் திருமகனாக அவதரித்தார். பெற்றோர் இவருக்குத் திருமறுமார்பன் என்றும் ஸ்ரீவத்ஸாங்கர் என்று பெயர் சூட்டினர். அரச குலத்துக்கு ஏற்ப எல்லா கலைகளையும் சிறப்பாகக் கற்ற இவர், வடமொழியிலும், தமிழ் மொழியிலும் நற்புலமை கொண்டு பேரம் புலவராகத் திகழ்ந்தார். இவரது தந்தையார் இவரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு திருமலைக்குச் சென்று வேங்கடசப் பெருமாளுக்கு கைங்கர்யங்கள் மேற்கொண்டார்.

திருமறுமார்பன் நீதி தவறாமல் நன்முறையில் அரசாட்சி நடத்தி வந்தார். ஒரு சமயம் நகர சோதனை செய்ய மாறுவேடத்தில் சென்றபோது ஓர் அந்தணர் அங்கு கூடியிருந்தவர்களிடம் தன் மகள் மணப்பருவம் எய்தி உள்ளாள். அவளை மணக்க யாரும் முன்வரமாட்டேன் என்கிறார்கள். ஏனென்றால் அவளின் பிறந்த நாள் மிகவும் கெட்ட தன்மை கொண்டதாக உள்ளது. ஆகையால் அவள் உயிர் வாழ்ந்து என்ன பயன் என்றும் அவளைக் கொன்றுவிடலாம் எனக் கருதுகிறேன் என்றும் கூறி துயரத்தில் மூழ்கி இருந்தார். இதைக் கேட்ட அரசன் மிகவும் துயருற்று, அதனைப் போக்கிட உரிய வழி யாது என யோசித்தார். அரசனின் கடமை மக்களின் துயர் துடைப்பதுதான் என்று எண்ணிய திருமறுமார்பன், அந்த அந்தணரை, தனது சபைக்கு வரவழைத்து, நகர சோதனையின்போது தான் கண்ட காட்சியையும் பேசிய சொற்களையும் அவரிடம் சொன்னார். அதோடு அவரது மகளை தாமே மனப்பதாகவும் சொன்னார். மேலும், நாம் கலவியை விரும்பி உமது மகளைக் கைப்பிடிக்கவில்லை. வாழ்க்கையில் தோள் கொடுத்தால் போதும் என்கிற மனப்பக்குவம் கொண்டு உமது மகளை மணந்து கொள்வதோடு, அவளுக்குத் தீமை ஏதும் நேராமலும் பார்த்துக் கொள்கிறேன்! எனக் கூறினார்.

இதைக் கேட்ட அந்த அந்தணர் ஆனந்தம் அடைந்து, தனது மகளான ஆண்டாளை அவருக்கு மணம் செய்து கொடுத்தார். அந்த அம்மையார் பெயருக்கேற்றவாறு நற்பண்புகள், பக்தி, தொண்டு மனப்பான்மை கொண்டவர். அவரும் கூரத்தாழ்வாரைப் போன்றே இல்லற இன்பத்தை நாடாமல் கணவருடன் சேர்ந்து திருமாலுக்குத் திருப்பணி செய்து வந்தார். அதையே பெரும் பேறாக எண்ணி ஒழுகலானார். (கூரத்தாழ்வாருக்கு திருமறுமார்பன் என்று பெயர் இருந்தாலும், திருமாலடியாரகத் திகழ்ந்த அவர் கூரத்தினை ஆண்டதால் கூரத்தாழ்வார் என்றே அழைக்கப்படலானார்). கூரத்தாழ்வார், அரசனாக இருந்த போதிலும் வறியவர்களிடம் மிகவும் கருணை கொண்டவராக விளங்கினார். அவர்களுக்கு உதவி செய்வதே பெரும் தொண்டாக நினைத்து உதவிகள் பல செய்து வந்தார். ஒருநாள் கூரத்தாழ்வார் வறியவர்களுக்கு வேண்டும் வரை கொடுத்து, கொலு மண்டபத்தின் கதவை அடைக்கும்போது இரவு நெடுநேரமாகியது. அரசனது கொலுமண்டபக் கதவு சாத்தும் ஓசை (கதவில் இருந்த வெண்கல மணிகளின் ஓசை) காஞ்சியில் உறைந்து அருள்பாலிக்கும் பெருந்தேவி தாயாருக்கும், வரதராஜப் பெருமாளுக்கும் கேட்டதாம்.

அந்த ஓசை கேட்ட தாயாரும் பெருமாளும், கூரேசன் வறியவர்களுக்கு வழங்கும் பணி முடிந்தது போலும் எனப் பேசிக்கொண்டார்களாம். இந்த நிகழ்ச்சியை திருவாலவட்ட கைங்கர்யம் (விசிறி வீசுதல்) செய்து வந்த திருக்கச்சி நம்பிகள் மூலம் ஆழ்வார் அறிந்தாராம். கூரத்தாழ்வார் காஞ்சி வரதராஜர் மேல் மிகவும் பக்தி கொண்டவர். இந்த நிகழ்ச்சியை திருக்கச்சி நம்பிகள் மூலம் கேட்டு மிகவும் இன்புற்ற அவரின் பக்தி மேலும் வலுப்பட்டது. எம்பெருமான் தம்மை மதிக்கும்படி செல்வச் செருக்கோடு வாழ்வது உசிதமாகாது என எண்ணிய அவர், தனது செல்வங்கள் அனைத்தையும் வறியவர்களுக்கு அளித்துவிட்டு அரச பதவியைத் துறந்தார். திருமாலே நற்கதிக்கு வழிகாட்டி என மனப்பூர்வமாக எண்ணி, தமது ஆசிரியரான ராமானுஜருடன் ஸ்ரீரங்கம் அடைந்தார். கூரத்தாழ்வாரும் அவரது இல்லாளான ஆண்டாள் அம்மையாரும் திருமாலுக்கும் ஆசாரியருக்கும் கைங்கர்யங்கள் பல செய்து வாழ்ந்தனர். இவரது ஆசாரிய பக்தியின் மேன்மையைப் பற்றி குரு பரம்பரையில் மிகவும் சிறப்பாகப் பேசப்படுகிறது.

ஒரு சமயம், கிருமி கண்டசோழன் என்ற மன்னன், ராமானுஜருக்குத் தீங்கு செய்ய எண்ணியதை அறிந்த கூரத்தாழ்வார், ராமானுஜர் போல் வேடம் பூண்டு அரசனிடம் சென்று வாதாடினார். அப்போது அந்த அரசனின் கொடுஞ்செயலால் தனது கண்களை இழந்தார். இந்த நிகழ்ச்சி அவர் ஆசாரியரிடம் கொண்ட பக்தியை வெளிப்படுத்துகிறது என்றால் அவரை எவ்வாறு புகழ்வது! என்னே ஆசாரிய பக்தி! இந்த நிகழ்ச்சியை அறிந்த ராமானுஜர், அவர் தன்பால் கொண்ட பக்தியைப் போற்றியும், வியந்தும் என்னை ஆளவந்த ஆழ்வான் என்று போற்றினார். ராமானுஜரின் ஆணைப்படி வரதராஜஸ்தவம் என்னும் நூலைப் பாடி, ஆசாரிய அனுக்கிரகத்தினால் இழந்த கண்களை மீண்டும் பெற்றார். இந்த நிகழ்ச்சி, ஆசாரியன் சிஷ்யனிடம் கொண்ட அபிமானத்தை சிறப்பாகக் காட்டுகிறது. எவனொருவன் ஆசாரியனிடம் பக்தி கொண்டு கைங்கர்யம் செய்து வந்தால், அவன் குருவின் (ஆசார்யனின்) ஆசியால் பகவானின் கருணைக்கும் பாத்திரமாகத் திகழ்வான் என்பதை உணர்த்தும் இந்த நிகழ்ச்சி நமக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது என்றால் அது மிகையாகாது என்பர். கூரத்தாழ்வானும் அவரது இல்லாள் ஆண்டாள் அம்மையாரும் ஆதர்ச தம்பதிகளாகவும், உடல் தீண்டா தம்பதிகளாகவும் வைராக்கிய சிலர்களாகவும்; அரங்கனே எல்லாம் என்றும் ஆசார்யனின் கடாக்ஷமே இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டி என்றும் எண்ணி இறுதிவரை அவ்வாறே வாழ்ந்து வந்தனர்.

ஆழ்வார்களின் அருளிச் செயல்களை மக்களுக்கு எடுத்துரைத்தும் அடியார்களின் சாதியை நோக்காது அவர்களைப் போற்றியும், ராமானுஜரின் சித்தாந்தத்தையும், அவரது பண்புகளையும் எடுத்துரைத்தும் வைணவத்தைப் பரப்பினார். அவர்களின் பக்திப் பண்புக்கு மெச்சிய அரங்கன் அவர்களுக்கு பட்டர், சீராம பிள்ளை என்ற இரண்டு குமாரர்கள் பிறக்க அருளாசி வழங்கினார். ஆசார்ய பக்தியும் திருமாலிடம் பக்தியும் அடியார்களிடம் பக்தியும் வறியவர்களின் துயர் துடைக்கும் பண்பும் ராமானுஜரின் சித்தாந்தத்தைப் பரப்புவதில் பேரானந்தமும் கொண்டு வாழ்ந்த கூரத்தாழ்வாரை அவரது திருநட்சத்திர தினம் வரும் நாளில் (தைமாத ஹஸ்த நட்சத்திர தினம், கூரத்தாழ்வாரின் அவதாரத் திருநாள்) சென்று சேவிப்போர் அவரது கடாக்ஷத்தால் அனைத்து வளமும் நலமும் பெறுவர் என்பது நிச்சயம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar