28 தூண்கள் இக்கோயிலின் சித்சபையில் உள்ளன. அவை, 28 சிவாகமங்களைக் குறிக்கும். 3 வழிபாட்டுமுறைகள் இந்து மதத்தில் உண்டு. அவை ரூபம், அரூபம், ரூபாரூமம், சிதம்பரத்தில் மட்டுமே, இந்த மூன்று முறைகளிலும் இறைவனை வழிபட முடியும். 43 ஏக்கர் பரப்பளவில் சிதம்பரம் கோயில் அமைந்துள்ளது. 21,600 தங்க ஓடுகள், பொன்னம்பலத்தின் மேலுள்ள தங்கக்கூரையில் வேயப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, மனிதன் ஒரு நாளில் விடும் மூச்சின் எண்ணிக்கையைக் குறிக்கும். 72,000 ஆணிகளைக் கொண்டு பொற்கூரையின் ஓடுகளை தைத்துள்ளனர். இந்த எண்ணிக்கை நம் உடலில் உள்ள 72,000 நாடிகளைக் குறிக்கும். 9 வாயில்கள் சிதம்பரம் கோயிலுக்கு. ராஜகோபுர வாயில்கள் - 4, உள்வாயில்கள் - 2, பொன்னம்பல வாயில்கள் - 2, கர்ப்பகிரஹத்துக்குச் செல்லும் பஞ்சாட்சரப்படி வாயில் - 1 6 அபிஷேகங்கள் சிதம்பரம் திருத்தலத்தில் விசேஷம். ஒரே ஆண்டில் சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சுக்கிலபட்ச சதுர்த்தசி, புரட்டாசி சுக்கிலபட்ச சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி சுக்கிலபட்ச சதுர்த்தசி ஆகிய நாட்களில் நடைபெறும் அபிஷேகங்களே அவை!