விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் என்னும் ஊரைச் சேர்ந்த பக்தர் ஆறுமுகசாமித் தம்பிரான், தன்னுடைய கனவில் பழநி முருகன் உத்தரவு கொடுத்ததன்பேரில், பழநியில் இருந்து மண் எடுத்து வந்து தன் ஊரில் பாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோயிலைக் கட்டினார். தைப்பூச விழாவில் இன்றைக்கும் அவருடைய வம்சத்தினர் பால் குடம் எடுத்து வந்து பாலதண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.