சென்னைபெங்களூர் சாலையில் பாலாற்றின் தென்கரையில் உள்ள புதுவசூர் என்னும் கிராமத்தில் மலைமீது அமைந்திருக்கிறது. ஸ்ரீதீர்த்தகிரி வடிவேல் கோயில். இந்த தலத்தில்தான் முருகப்பெருமான் ஔவையிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று சொல்லாடல் நிகழ்த்தியதாகச் சொல்கிறார்கள். அதற்குச் சாட்சியாக மூலவர் சன்னிதிக்கு எதிரில் பெரிய நாவல் மரம் இருப்பதைப் பார்க்கலாம். 500 வருடப் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில், கோடையிலும் வற்றாத நீர் ஊற்று ஒன்றும், புனிதக் கிணறு ஒன்றும் உள்ளன. இவற்றின் தீர்த்தம் சகல பிணிகளையும் போக்கும் சக்தி கொண்டது.