திருச்சியில் இருந்து மதுரை செல்லும் வழியில் அமைந்திருக்கிறது விராலிமலை. விராலிமலை பேருந்து நிலையத்தின் அருகில் பிரமாண்டமான மலையின் மேல், அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் முருகப் பெருமான். இவ்வூரில் முருகப் பெருமான் வயோதிகராக வந்து ஒரு பக்தரிடம் இந்து சுருட்டைப் பெற்றுக்கொண்டதால், இங்கே முருகனுக்கு சுருட்டு நைவேத்தியம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.