சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், அப்பகுதி மக்களால் எட்டாம் படைவீடு என்று போற்றப்படுகிறது. இங்கே, ஐப்பசி மாதம் சூரசம்ஹாரத்துக்கு மறுநாள் நடைபெறும் திருக்கல்யாண உற்ஸவம் சிறப்பு. அன்று, அருகில் உள்ள துலுக்காணத்தம்மன் கோயிலில் இருந்து முருகப் பெருமானுக்கு தாய்வீட்டு சீர்வரிசை வருவது சிறப்பம்சம்.