Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு வெளி மாநில ... பழநி மலைக்கோயில் உண்டியல் வசூல் ரூ.1.81 கோடி பழநி மலைக்கோயில் உண்டியல் வசூல் ரூ.1.81 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்ணகி கோயிலை சீரமைக்க தொல்லியல்துறை டெண்டர்
எழுத்தின் அளவு:
கண்ணகி கோயிலை சீரமைக்க தொல்லியல்துறை டெண்டர்

பதிவு செய்த நாள்

25 ஜன
2017
11:01

கூடலுார்: தமிழக - கேரள எல்லையில் சேதமடைந்த பழமை வாய்ந்த மங்கலதேவி கண்ணகி கோயிலை சீரமைக்க, கேரள தொல்லியல் துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.  தேனி மாவட்டம் கூடலுார் அருகே தமிழக- கேரள எல்லையான வின்னேற்றிப்பாறை மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது. தமிழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயில் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை இரு மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் ஒவ்வொரு ஆண்டும் சேதமடைந்து தற்போது முழுமையாக அழியும் நிலையில் உள்ளது. கண்ணகி சிலையும் உடைந்துள்ளது. இதனால் இதனை சீரமைக்க மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் கேரள உயர்நீதி மன்றத்தில் 2014ல் வழக்கு தொடரப்பட்டது. அழிந்து வரும் கண்ணகி கோயிலை முழுமையாக சீரமைத்து தர வலியுறுத்தி, கேரள தொல்பொருள் ஆய்வுத்துறை மற்றும் வனத்துறை மீதும் வழக்கு தொடர்ந்தனர்.

இதன் எதிரொலியாக 2016 ஏப்., 5ல் கேரள உயர்நீதி மன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பில், கண்ணகி கோயிலை தொல்பொருள் ஆய்வுத் துறையும், கேரள வனத்துறையும் விரைந்து சீரமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்த முன்வராததால் மீண்டும் கண்ணகி அறக்கட்டளை சார்பில் தீர்ப்பை அமல்படுத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நடந்தது. இதில் கண்ணகி கோயிலை சீரமைக்க ரூ.39 லட்சத்து 33 ஆயிரத்து 725 க்கு திட்ட மதிப்பீடு செய்து விடப்பட்ட டெண்டர் அறிவிப்பை நீதிமன்றத்தில் தொல்பொருள் ஆய்வுத்துறை வழங்கியுள்ளது. டெண்டர் உறுதியானவுடன் விரைவில் கோயில் சீரமைப்புப் பணி துவங்கும்.  கண்ணகி அறக்கட்டளையினர் கூறும்போது: அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட வழக்கின் எதிரொலியாக, கண்ணகி கோயில் சீரமைப்பு பணி விரைவில் துவங்க உள்ளது. சீரமைப்பு பணிகள் முடிந்து விட்டால் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு கோயில் பாதுகாக்கப்பட்டு, தமிழக மக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கான வாய்ப்புகள் வரும். கோயிலுக்கு செல்லும் பாதையும் சீரமைக்கப்படும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலை எப்படி பார்க்கப்பட்டதோ அதே போல் தமிழக மக்கள் மீண்டும் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar