Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லவனுக்கு உதவி செய்யுங்க! அழகுக்கலை தோன்றிய இடம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குடும்பத்தை விட்டு விலகியிருக்கும் பூஜாரி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
05:01

திவ்யதேசங்களில் ஸ்ரீரங்கமும், திருப்பதியும் எப்படி சிறப்பாகத் திகழ்கிறதோ அதுபோல, கேரளத்தில் சிறப்புடன் திகழும் திருத்தலம் குருவாயூர். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கிருஷ்ணர் கோயில்களில் குறிப்பிடத்தக்கது. குருவும், வாயுவும் சேர்ந்து இவ்விடத்தில் குருவாயூரப்பனை பிரதிஷ்டை செய்ததால் குருவாயூர் என இவ்வூருக்கு பெயர் வந்தது. கோயில் வெளி பிரகாரத்தில் கொடிமரத்தடியில் இருக்கும் பலிபீடம் குரு,வாயுவின் அதிஷ்டானம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு மூலவர் விக்ரஹம் சாதாரணக் கல்லால் ஆனதல்ல. பாதாள அஞ்சனம் என்னும் மூலிகையால் ஆனது. குருவிற்கும், வாயுவிற்கும் இவ்விடத்தைக் காட்டி அருள்புரிந்த சிவபெருமான், கிருஷ்ணன் கோயில் அருகிலுள்ள மம்மியூரில் கோயில் கொண்டுள்ளார். இங்கு அதிகாலை 3மணிக்கு நடை திறக்கப்படும். முதல்நாள் கிருஷ்ணர் சூடியிருந்த பூமாலை, துளசி ஆகியவற்றோடு காணும் நிர்மால்ய தரிசனத்தை மிகுந்த பாக்கியமாக பக்தர்கள் கருதுகின்றனர். காலை 3 முதல் இரவு 10மணிவரை குருவாயூரப்பனுக்கு 12 முறை அலங்காரம் செய்யப்படுகிறது. இரவு நடைபெறும் திருப்புக்கா தரிசனத்தில் பெருமாளுக்கு அஷ்டகந்தம் என்னும் எட்டுவிதமான வாசனைப்பொருள்களால் துõபமிடுவர். கருவறை நுழைவாயில் சிறிதாக இருந்தாலும், வெகுதுõரத்தில் இருந்து கூட தரிசிக்கும் விதத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தீபஸ்தம்பம், துவஜஸ்தம்பம் (கொடிமரம்) பலிபீடம் ஆகியவை கூட மூலவரை மறைப்பதில்லை. இங்கு பூஜை செய்யும் மேல்சாந்தி ஆறுமாத காலம் குடும்பத்திலிருந்து விலகி இருக்கவேண்டும் என்ற நியதி பின்பற்றப்படுகிறது. குழந்தைக்கு சோறுõட்டுவது, துலாபாரமாக வாழைப்பழம், இளநீர், வெல்லம், கயிறு கொடுப்பது ஆகிய நேர்த்திக்கடன்கள் முக்கிய மானவை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar