Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேச்சு திறமை தரும் பாடல்கள்! ஏன் சிரித்தான் இறைவன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனதை மாற்றிய சாம்பல்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
05:01

மாணிக்கத்திற்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. திருநீறை வெறும் சாம்பல் என்று நண்பர்களிடம் சொல்வான். அவனுக்கு பிறர் பொருளைத் திருடி சாப்பிடுவதில் அலாதி இன்பம்.ஒருமுறை, ஒரு தோட்டத்துக்குச் சென்ற அவன் அங்கிருந்த மாம்பழங்களை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து மூடையாகக் கட்டி வெளியே கொண்டு சென்றான். ஒன்றிரண்டு பழங்களை ருசித்து விட்டு, மற்றதை நல்ல விலைக்கு விற்றான். தோட்டக்காரனுக்கு கடும் வருத்தம். கஷ்டப்பட்டு உழைத்து வளர்த்த மாமரத்தின் பழங்களை யாரோ பறித்துச் சென்று விடுகிறார்களே என்று வாடினான்.இப்படியே சில நாட்கள் தொடர்ந்தது. சுதாரித்துக் கொண்ட தோட்டக்காரன் இரவு வேளையில் தோட்டத்தைச் சுற்றி சில காவலர்களை நிறுத்தினான். அவனும் ஒருபுறம் நின்று கொண்டான். இதையறியாத மாணிக்கம் தோட்டத்துக்குள் புகுந்து பழங்களை பறிக்க ஆரம்பித்தான். சத்தம் கேட்ட காவலர்கள் மெதுவாக அவன் நிற்குமிடம் நோக்கிச் சென்றனர். ஆனாலும், காய்ந்த இலைகளின் மேல், அவர்கள் நடந்து வந்த சப்தத்தைக் கேட்ட மாணிக்கம் உஷாராகி விட்டான்.மறைவாக நின்று, அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த சாம்பலை நெற்றியிலும், உடலிலும் குழைத்துப் பூசிக்கொண்டு தவத்தில் இருப்பது போல் நடித்தான். காவலர்கள் திருடன் யாரையும் காணாமல், யாரோ ஒரு சாமியார் மட்டும் அங்கே இருப்பதைப் பார்த்து வணங்கினர். போலிச்சாமியாரோ நிஷ்டை கலையாதது போல் நடித்தார்.மறுநாள், ஊருக்குள் இந்த தகவல் செல்ல, மக்கள் பழம், தேங்காய், கற்பூரம், காணிக்கைப் பணத்துடன் தோட்டத்தில் இருந்த சாமியாரைத் தரிசிக்க வந்தனர். மாணிக்கம் அவர்களை ஆசிர்வதிப்பது போல நடித்து, தானாக கிடைத்த பணத்தை வாரிக்கொண்டான்.ஆனால், அவன் மனம் மாறிவிட்டது. நாத்திகனாக இருந்த போது, திருட்டு புத்தி தான் இருந்தது. இப்போது, போலியாக சாம்பலைப் பூசியதற்கே மக்கள் இவ்வளவு மரியாதை தந்தனர். நிஜத்திலேயே சாமியாராகி விட்டால், தன் மதிப்பு இன்னும் அதிகரிக்குமே என எண்ணினான். நாத்திகத்தை கைவிட்டான். ஆத்திக நுõல்களைப் படித்தான். நிஜமாகவே சாமியாராகி விட்டான்.
ஆத்மதிருப்தி கிடைத்தது. மக்களுக்கு நல்லதைச் செய்ய ஆரம்பித்தான்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar