Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏன் சிரித்தான் இறைவன்! காலம் நமக்கு தோழன் காற்றும் மழையும் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தேங்காய் உடைப்பது ஏன் தெரியுமா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
05:01

* கடவுளுக்கு அடுத்தது காலம்; காலம் மிகப் பெரியது. காலம் என்ற ஒன்றுக்குள் உலகம் முழுவதும் அடங்கிவிடும்.
* கடவுள் தன்னைப் பற்றி நினைக்காதவர்கள் உள்ளத்தில் பாலில் நெய் போல் மறைந்து இருக்கிறார். நினைப்பவர் உள்ளத்தில் தயிரில் வெண்ணெய் போல வெளிப்பட்டு இருக்கிறார்.
* பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் நிழல் தந்து மரம் உறைவிடமாக உதவுவது போல் இல்லறத்தான் எப்போதும் பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும். மனதாலும், வாக்காலும், உடம்பினாலும் பிறர்க்கு நன்மை செய்ய வேண்டும்.
* வயலில் மணியான நெல் விதைத்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுபோல் அடியார்களுக்கு நல்ல உணவு வழங்கினால் புண்ணியம் விளையும்.
* தெய்வ சிந்தனையே, விலங்கிடம் இருந்து மனிதனைப் பிரிக்கும். ஆதலால், நீ உண்ணாமல் இருக்கலாம், உறங்காமல் இருக்கலாம். ஆனால், கடவுள் சிந்தனையின்றி இருக்கக்கூடாது.
* ஒற்றுமையில் உயர்ந்தது எறும்பு. சாமர்த்தியத்தில் உயர்ந்தது வான்குருவி. நன்றியில் உயர்ந்தது நாய். வலிமையில் உயர்ந்தது யானை. தந்திரத்தில் உயர்ந்தது குள்ளநரி. ஒழுக்கம் இருந்தால் தான் மனிதன் உயர்ந்தவனாகிறான்.
* உயிர் இருப்பதால் தான் உடம்பு அசைகிறது என்று உணர்வது போல், கடவுள் இருப்பதால் தான் உலகம் இயங்குகிறது என்று நம்புதல் வேண்டும்.
* நல்ல உணவுகளை உண்பதனால் உடல் வளரும். நல்ல நுõல்களைப் படிப்பதனால் நல்ல உணர்வுகள் மலரும்.
* கண்ணுக்குத் தெரிந்த இந்த உலகிற்குச் சேவை செய்வதோடு, கண்ணுக்குக் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்ய வேண்டும்.
* எப்போதும் இறைவனை நினைக்க வேண்டும். அது உன்னால் ஆரம்பத்தில் முடியாவிட்டால் காலையில் எழுகின்ற போதும், சாப்பிடும் போதும், இரவில் படுக்கும் போதும் தவறாமல் நினைக்க வேண்டும்.
* தேங்காய் உள்ளே பரிசுத்தமாக இருப்பது போல் மனதையும் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைக் காட்டவே கோயிலில் தேங்காய் உடைக்கிறோம்.
* போதும் என்ற திருப்தி ஒருவருக்கு எப்போதுவருகிறதோ, அன்றே அவருக்கு மகிழ்ச்சி மாளிகையின் கதவு திறக்கப்படுகிறது.
* உறவினர்களையும், நண்பர்களையும் உபசரிப்பதற்குப் பெயர் விருந்து அல்ல. ஏழைகளுக்குச் செய்யும் உபசாரம் தான் விருந்து.
* முதுமைக்குத் தேவைப்படுவதை இளமையில் தேடிக் கொள்வது அறிவுடைமை. அதேபோல் மறுமைக்கு வேண்டியதை இம்மையில் தேடிக் கொள்ள வேண்டும்.
* பசுவின் வாயில் இரையைத் தந்து அதன் மடியில் பாலைக் கறக்கிறோம். அடியார்கள் வாய்; இறைவன் மடி; அடியார்களுக்குச் செய்தால் இறைவனாகிய மடியில் திருவருள் என்னும் பால் சுரக்கும்.
* மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என்று பொருள். நினைக்க வேண்டியதை நினைக்க வேண்டும். நினைக்கின்ற கருவி மனம். மனம் மனிதனுக்கு மட்டுமே அமைந்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar