பதிவு செய்த நாள்
28
ஜன
2017
01:01
வாலாஜாபேட்டை: தை அமாவாசையை முன்னிட்டு, 1,000 கிலோ மிளகாய் வற்றல் யாகம் நடந்தது. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த, கீழ்புதுப்பேட்டையில் தன்வந்திரி ஆரோக்கிய பீடம் உள்ளது. இங்கு தை அமாவாசையையொட்டி நேற்று காலை, 10:00 மணிக்கு அமாவாசை ஹோமம் நடந்தது. தொடர்ந்து துர்கா ஹோமம், மஹா ப்ரத்தியங்கிராதேவி ஹாமம், சகல தேவதா ஹோமம் நடந்தது. பின்னர், 1,000 கிலோ மிளகாய் கொண்டு மிளகாய் வற்றல், பூசணிக்காய், கடுகு, மிளகாய், உப்பு, சிவப்பு நிற புஷ்பங்கள், சிவப்பு நிற வஸ்திரங்கள், வேப்பெண்ணை கொண்டு சிறப்பு யாகம் நடந்தது. 468 சித்தர்களுக்கு, பொது மக்கள் அபிஷேகம் செய்தனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தோஷமில்லாமல் நலமுடன் வாழ, முரளிதரசாமி தலைமையில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது.