Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்தூரில் வினோத நடைமுறை! மனசை பார்த்துக்க நல்லபடி..
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெற்றால் தான் பிள்ளையா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2017
04:01

சென்னையைச் சேர்ந்த தம்பதிக்கு குழந்தைப்பேறு வாய்க்கவில்லை.  காஞ்சிப்பெரியவரை நேரில் சந்தித்து ஆசி பெற வந்தனர். பக்தர்களின் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த போது, சிறுமி ஒருத்தி அந்த தம்பதியிடம்  அன்புடன் ஒட்டிக் கொண்டாள். அவளது வலக்கன்னத்தில் மச்சம் ஒன்றிருந்தது.  பெரியவரிடம் தங்களின் மனக்குறையை தம்பதிகள் தெரிவித்த போது, அந்தச் சிறுமியும் உடனிருந்தாள். அப்போது பெரியவர், “யார் இந்த சிறுமி?” என்று கேட்டார். ஒருவரும் சிறுமியை உரிமை கொண்டாட முன் வரவில்லை. தம்பதியிடம்  பெரியவர், அச்சிறுமியை வளர்த்து ஆளாக்கும்படி ஆசியளித்தார். சிறுமிக்கு காமாட்சி என்று பெயரிட்டு வளர்த்தனர். குழந்தை வீட்டுக்கு வந்த அடுத்த வருடத்தில், அந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.  அனைவரும் குழந்தை காமாட்சியால் கிடைத்த அதிர்ஷ்டம் இது என்று வியந்தனர். இரு குழந்தைகளையும் சமமாக கருதி வளர்த்தனர். ஒருநாள் கோவில் திருவிழாவுக்கு அழைத்துச் சென்ற இடத்தில் காமாட்சி காணாமல் போனாள். எங்கு தேடியும்  கிடைக்கவில்லை. ஆண்டுகள் உருண்டோடினாலும் தம்பதிக்கு வருத்தம் தீரவில்லை. ஒருமுறை காஞ்சிபுரம் சென்ற தம்பதி பெரியவரிடம், “சுவாமி... பெற்றால் தான் பிள்ளையா? எங்களின் அன்பு மகள் காமாட்சி எங்கிருக்கிறாளோ... இப்போது  அவள் திருமண வயதை அடைந்திருப்பாளே...” என்று வருந்தினர். பெரியவர் மடத்தில் இருந்த ஒரு பணிப்பெண்ணை அழைத்து, “திருமணம் செய்ய விரும்பினால், இவளுக்கு நடத்தி வையுங்கள்,” என்றார். அவளைக் கண்ட தம்பதிக்கு கண்ணீர் பெருகியது. காரணம், அவளே தங்கள் வளர்ப்புமகள் காமாட்சி என்பதால் தான்.  அவள் கன்னத்தில் இருந்த மச்சம் அவளை அடையாளம் காண இலகுவாக இருந்தது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar