Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெற்றால் தான் பிள்ளையா? கடவுளுக்கே கடன் தந்தவர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனசை பார்த்துக்க நல்லபடி..
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2017
04:01

*பிறர் உங்களைப் பற்றி என்ன சொன்னாலும், நினைத்தாலும் கவலைப்படாதீர்கள். பிறரைப் பற்றி நீங்களும் சிந்திக்கக் கூடாது. உங்கள் மனதுக்கு நீங்கள் நல்லவராக இருந்தால் போதும்.
*பிறருக்கு இயன்ற உதவி செய்யுங்கள். மற்றவர் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.  உத்தமர்களின் வரிசையில் உங்களை முதலிடம் பெறச் செய்வது கடவுளின் பொறுப்பு.
*அன்றாடம் அரை நிமிட நேரம் ஒதுக்கி, நீங்கள் மனத்துõய்மை கொண்டவரா என்பதை உங்களை  நீங்களே கேட்டுப் பாருங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்ள இது உதவியாக இருக்கும்.
*தர்மத்தின் வழியில் மட்டும் செல்லுங்கள். அது ஒன்றே நல்வாழ்வுக்கு துணைநிற்கும். உலக ஆசைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அவை நம்மை பாவத்தில் தள்ளி விடும்.
*கணவருக்கு பணிவிடை செய்வதைத் தவிர வேறெதையும்  பதிவிரதை எண்ண மாட்டாள். அதுபோல கடவுளைச் சரணடைந்த பக்தன் அவரைத் தவிர வேறொன்றை சிந்திக்க மாட்டான்.
*சிந்திக்கும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் நன்றியுடன் கடவுளை வழிபடாமல் போனால்,  மனிதன் விலங்கு நிலைக்கு தாழ்ந்து விடுவான்.
*தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் உழைப்பில் ஈடுபட்டால் கடவுளின் அருள் துணை நிற்கும். அவன் வாழ்வில் எல்லா மேன்மைகளையும் அடைவான்.
*ஒழுக்கம் மனிதனின் உயிருக்குச் சமம். படிப்பு, பணம், புகழ் என அனைத்து செல்வங்களைப் பெற்றிருந்தாலும் ஒழுக்கம் இல்லாவிட்டால் அவற்றால் பயனில்லை.
*நதி வழியே ஓடும் தண்ணீர் கடலைச் சென்றடைவது போல, உலகிலுள்ள அனைத்து உயிர்களும் என்றாவது ஒருநாள் கடவுளைச் சென்று சேர்வது உறுதி.
*மருத்துவர் அறுவை சிகிச்சை செய்வதன் நோக்கம் உடல்நலனைக் காப்பது தான். அது போல, கடவுளால் கொடுக்கப்படும் சோதனை அனுபவங்களும்  நம்மைப் பண்படுத்துவதற்கான முயற்சியே.
*உண்பதற்காக உலகில் வாழ்வது கூடாது. நாவை முதலில் கட்டுப்படுத்துங்கள். எல்லாம் தானாகவே அடங்கி விடும்.
*உள்ளத்தில் கர்வம் இருந்தால் சொல்லும், செயலும்  முரண்படும். அடக்கம் இருந்தால் சொல்லும், செயலும் ஒன்றுபடும்.
*கடவுள் சிந்தனையோடு உணவை உட்கொள்ள வேண்டும். இதைப் பின்பற்றினால் சாப்பிடும் அனைத்தும் அவருக்குப் படைக்கப்பட்ட பிரசாதமாகி விடும்.
*சிறிதும் அகந்தை வேண்டாம். பணியாளனைப் போல கடமையாற்றுங்கள். கடவுளின் அருளால் எல்லாம் நன்மையாகவே நடக்கும்.
*வாழ்நாள் விரைந்து ஓடிக் கொண்டிருக்கிறது. காலம் மதிப்பு மிக்கது. எப்போதும் நல்ல பணிகளில் ஈடுபட்டு வாழ்வைப் பயனுள்ளதாக்குங்கள்.
*சத்திரத்தில் சிலநாள் தங்குவது போல, மனிதனுக்கு உலக வாழ்வு என்பது  சில காலம் மட்டுமே.  சத்திரத்திற்கு உரிமையாளன் ஒருவன் இருப்பது போல, உலகிற்கு கடவுளே உரிமையாளர். (மகான் சாந்தானந்தர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar