குளித்தலை: மேட்டுமருதூர் அங்காளம்மன் கோவிலில், 12வது ஆண்டு விழா கோலாகலமாக நடந்தது. குளித்தலை அடுத்த மருதூர் டவுன் பஞ்சாயத்து, மேட்டு மருதூர் அங்காளம்மன் கோவிலில், 12வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில், கோவில் குடிப்பாட்டுக்கார்கள், பக்தர்கள் ஆகியோர், காவிரியாற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து, மூன்று கால பூஜைகள் செய்தனர். பின், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.