காரியாபட்டி: கோவை ஈஷாயோகா மையம் சார்பில் பிப். 24ல் மஹாசிவராத்திரி அன்று 112 அடி உயரமுள்ள உலகிலேயே மிகப் பெரிய முகம் கொண்ட ஆதியோகி சிவன் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிரதிஷ்டை செய்ய உள்ள 112 அடி ஆதியோகி சிவன் சிலை கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. காரியாபட்டிக்கு நேற்று வந்தபோது ஏராளமானோர் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். ஆதியோகி சிவன் ரத ஊர்வலத்திற்கு காரியாபட்டி ஈஷாயோகா மையம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.