நடுவீரப்பட்டு: கடலுார் அடுத்த நடுவீரப்பட்டு நரியன் ஓடை அருகே புதியதாக கட்டப்பட்டுள்ள பாதாள காளி மற்றும் பிரித்தியங்கரா தேவி கோவில் கும்பாபிஷேகம் வரும் 2 ம் தேதி காலை நடக்கிறது. அதனையொட்டி இன்று காலை 7:00 மணிக்கு கணபதி ேஹாமத் துடன் பூஜை துவங்கி மாலை யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை 1ம் தேதி காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், இரவு 9:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. 2ம் தேதி காலை 6:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடாகி 10:20 மணிக்கு பாதாளகாளி மற்றும் பிரித்தியங்கரா தேவி கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.