சிவசுப்ரமணிய சுவாமி கோவில் 2ம் தேதி மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2017 12:01
கடலுார்: கடலுார், சான்றோர்பாளையம் சிவசுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 2ம் தேதி நடக்கிறது. கடலுார் துறைமுகம் அடுத்த சான்றோர்பாளையத்தில் அமைந்துள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவில் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து வரும் 2ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனையொட்டி நாளை காலை 8:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் பூஜை துவங்கி அன்று இரவு 7:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது. மறுநாள் 2ம் தேதி காலை 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 10:00 மணிக்கு விமானங்களுக்கும், 10:20 மணிக்கு மூலவர் மற்றும் பரிவாரங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.