அச்சிறுப்பாக்கம்: பெரும்பேர் கண்டிகையில், ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பல கோவில்களை உடைய பெருமை பெற்றது, பெரும்பேர் கண்டிகை. இந்த கிராமத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ளது, தத்தாத்ரேயர் கோவில். அங்குள்ள காரிய சித்தி அபய அஷ்ட ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று, கும்பாபிஷேகம் விமரிசையாக நடை பெற்றது. மைசூரு கணபதி சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் விஜயானந்தா தீர்த்தாச்சார்யார் உள்ளிட்டோர் பங்கேற்று, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.