கோவிலுக்கு செல்லும் வீதி வயலானது: சென்னிமலையில் தைப்பூச பக்தர்களுக்கு சிக்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2017 12:01
சென்னிமலை: சென்னிமலையில் சேறும் சகதியுமாக மாறிய தெருவால், மலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், முகம் சுளித்து செல்கின்றனர். சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் பாதையில் அப்பாய் செட்டியார் தெரு உள்ளது. சாலையில், டவுன் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் மூன்று கூட்டுறவு வங்கிகள், கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் என, பல செயல் படுகின்றன. சமீபத்தில் பெய்த மழையால், சாலை வயல்வெளி போல் மாறி விட்டது. சாலையின் இருபுறமும் சாக்கடை கட்டும் பணி நிறைவு பெற்று ஒரு மாதத்திற்கு மேலாகிறது. தார்ச்சாலை போட, பூமி பூஜை போட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், சாலை அப்படியே தான் உள்ளது. தைப்பூசத்தை ஒட்டி, சென்னிமலை முருகன் கோவில் தேர்த்திருவிழாவுக்கு பல பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், இந்த வழியாகத்தான் கோவிலுக்கு செல்ல வேண்டும். அதற்குள் சாலையை சரி செய்ய வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.