பதிவு செய்த நாள்
01
பிப்
2017
04:02
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் இளைய மடாதிபதியாக குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டு அவருக்கு நேற்று ஞானாபிஷேகம் நடை பெற்றது.
சைவமும், தமிழும் தழைத்து இனிது ஓங்க அரும்பணி ஆற்றிவரும் சைவ ஆதீனங்குள் தலை சிறந்து விளங்குவது தருமபுரம் ஆதீனம். இந்த ஆதீனம் குரு ஞானசமபந்தரால் 500 ஆண் டுகளுக்கு முன்பு தொடங்கப்பெற்று சமய, சமுதாய இலக்கிய, கல்வி பணிகளை சிறப்புற ஆற்றிவருகிறது. இந்த ஆதீனத்தின் 26 வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இருந்துவருகிறார். ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் நியமிக்கப்பட்டு நேற்று ஞானாபிஷேகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஆதீனத்தில் சொக்கநாதர் பூஜை மடத்தில் புனித கலசம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தருமை ஆதீனம் 26 வது குருமகா சன்னி தானம் முன்னிலையில் மகா தீபாராதனை நடைபெற்று சொக்கநாதர பெருமான் சனனதியை வலம்வந்து தருமை ஆதீனம் 26வது குருகா சன்னிதானம் இளைய மடாதிபதிக்கு ஞானாபிஷேகம் செய்துவைத்தார்.
தொடர்ந்து தருமை ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஞானபீடத்தில் அமர இளைய மடாதிபதி, குருமகா சன்னிதானததிற்கு பூஜைகளை செய்து வழிபட்டார். தொடர்ந்து குமா ரசாமி தம்பிரானுக்கு ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் என திரு நாமம் சூட்டி இளைய மடாதிபதியாக நியமனம் செய்து தருமை ஆதீனம் அருளாசி வழங்கினார். தொடர்ந்து இளைய மடாதிபதி ஞானபீடத்தில் அமர திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் பூஜைகள் செய்தார். தொடர்ந்து தரு மபுரம் ஆதின குருமகா சன்னிதானம் மற்றும் இளைய மடாதிபதி ஆகியோர் இணைந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத்தலைவர் வேதா ந்தம்ஜி, தருமபுரம் ஆதின தம்பிரான்கள் கந்தசாமி தம்பிரான், மாணிக்கவாசக தம்பிரான், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகா தேவன், விமலா, மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன், பாஜ மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார், கோவி சேதுராமன், நாஞ்சில்பாலு, ஆதீன கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, பார திதாசன் பல்கலைக்கழக முன்னாள் செனட் உறுப்பினர் செல்வநாயகம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.