தளவாய்புரம்: தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் தெப்பம் சேதமடைந்து பல ஆண்டுகளாகியும் சீர் செய்யவில்லை. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். தேவதானம் மேற்கே பஞ்சபூத தலங்களில் ஒன்றான நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தெப்பம் பல ஆண்டு முன் சேதமடைந்து சுற்று சுவர் இடிந்து விழுந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள், பக்தர்கள் பல முறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் இதுவரை நடவடிக்கையில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போதும் தெப்பத்தை சீர் செய்யவில்லை. அறநிலையத்துறை அதிகாரிகள் உடனே சீர் செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாரியப்பன் (சேத்துார்): பல ஆண்டுகளாக இக்கோயிலுக்கு வருகிறேன். தெப்பக்குளத்தில் கால் கழுவி, தலையில் தீர்த்தம் தெளித்து செல்ல வழியில்லை. தெப்பக்குளம் சீர் செய்யாததால் சிரமப்படுகிறோம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெப்பக்குளத்தை சீர் செய்ய வேண்டும்.