பதிவு செய்த நாள்
03
பிப்
2017
12:02
பெரியகுளம்: பெரியகுளம் கோபாலகிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் குடும்பத்துடன் பங்கேற்றார். பெரியகுளம் தென்கரையில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட பழமை வாய்ந்த கோபாலகிருஷ்ணன் கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக மூன்று நாட்கள் யாகசாலையில் புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், பூர்ணாஹூதி, ஆசார்யவரணம், மஹாசாந்தி ஹோமம், ஸர்வதேவார்ச்சனம் உட்பட பூஜைகளை அர்ச்சகர்கள் முத்து, கண்ணன், பாபு நடத்தினர்.
நேற்று காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற ஏராளமான பக்தர்களின் கோஷத்திற்கிடையே அர்ச்சகர்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர். அப்போது வானத்தில் கருடன் வட்டமடித்து ஆசீர்வதித்தது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. மூலவர் கோபாலகிருஷ்ணன் குழந்தை வடிவில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். முதல்வர் பன்னீர்செல்வம், மனைவி விஜயலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் பங்கேற்றார். கலெக்டர் வெங்கடாசலம், தேனி எஸ்.பி.,பாஸ்கரன், எம்.எல்.ஏ., கதிர்காமு, நகராட்சி முன்னாள் தலைவர் ராஜா, மாவட்ட ஜெ., பேரவை துணைத்தலைவர் முருகானந்தம், அ.தி.மு.க., நகர செயலாளர் ராதா, துணை செயலாளர் அப்துல்சமது, கட்சி நிர்வாகிகள் பழனிவேலன், குறிஞ்சி மணி, முத்து உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருப்பணிக்குழு உறுப்பினர்கள் ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப், நாகராஜன், சிதம்பரசூரியவேலு, தக்கார் கிருஷ்ணவேணி செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.