வாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருக்கல்யாணவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2017 12:02
விருதுநகர்: விருதுநகர் வாலசுப்ரமணிய சுவாமி தைப்பூச திருக்கல்யாணவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. முக்கிய விழாவான தைப்பூச திருக்கல்யாணம் பிப். 9 ல் நடக்கிறது. தேரோட்டம் பிப்.10 ல் நடக்கிறது. நேற்று மாலை 6 மணியளவில் கும்ப பூஜை மற்றும் யாக பூஜை நடந்தது. இரவு 7.05 க்கு கொடியேற்றம் நடந்து. அதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் வெள்ளி சப்பரத்தில் ஸ்ரீ வால சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானை நகர்வலம் வந்தனர். நாளை சுவாமி பூஜைக்கு பின், மான் வாகனத்தில் நகர்வலம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.